இலவச தாய்சேய் ஊர்தி ஆட்சியர் துவக்கி வைத்தார்

565பார்த்தது
இலவச தாய்சேய் ஊர்தி ஆட்சியர் துவக்கி வைத்தார்
வால்பாறை பகுதிக்கு இலவச தாய்சேய் ஊர்தியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

பிரதம மந்திரி நல நிதியிலிருந்து வால்பாறை பகுதிக்கு இலவச தாய் சேய் ஊர்தி (102 vehicle) வழங்கப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் இன்று காலை 10மணியளவில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

முன்னதாக ஊர்தியில் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்நாடு சுகாதார திட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதன் மதிப்பு 17 லட்சம் எனவும் இனி வரும் நாட்களில் வால்பாறை அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் இந்த வாகனம் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி