மேஜிக்‌ஷோ போட்டியில் சாதனை படைத்த கோவை மாணவர்கள்!!

57பார்த்தது
மேஜிக்‌ஷோ போட்டியில் சாதனை படைத்த கோவை மாணவர்கள்!!
கோவை: தென்னிந்திய அளவிலான மேஜிக்‌ஷோ நிகழ்ச்சி மற்றும் இந்திய மாய இயல் பொழுது போக்கு சங்கத்தின் 55-வது ஆண்டு விழா நிகழ்ச்சி சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 18ம்தேதி நடைபெற்றது. இதில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து ஏராளமான மேஜிக் நிபுணர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 55 மேஜிக் நிபுணர்கள் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் 55 நிமிடங்கள் பல்வேறு விதமான மேஜிக் செய்து அசத்தினர். இதனை பல்வேறு பார்வையாளர்கள் கண்டு வியப்படைந்தனர். மேலும் இந்த சாதனையை சிகரம் உலக சாதனை புத்தகம் தனது பக்கத்தில் பதிவிட்டது. தொடர்ந்து தென்னிந்திய அளவில் சீனியர் மற்றும் ஜூனியர் ஆகிய பிரிவுகளில் மேஜிக்‌ஷோ நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் ஜூனியர் பிரிவில் சென்னையை சேர்ந்த சித்தார்த் முதல் பரிசையும், கோவையை சேர்ந்த சுவஸ்திக் 2-ம் இடத்தையும், பிடித்தனர். சீனியர் பிரிவில் கோவை சேர்ந்த நந்தகுமார் முதலிடத்தையும் பெங்களூரை சேர்ந்த ஜோ மற்றும் கிரிதரன் 2 மற்றும் 3-ம் பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. தென்னிந்திய மேஜிக்‌ஷோ போட்டியில் சாதனை படைத்த கோவை மாணவர்களான சுவஸ்திக் மற்றும் நந்தகுமார் ஆகியோர் இன்று கோவை திரும்பினர், அவர்களுக்கு கோவையில் உள்ள பொதுமக்கள் பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

டேக்ஸ் :