2023 ஆம் ஆண்டிற்கான கராத்தே பிளாக் பேல்ட் வழங்கும் நிகழ்ச்சி

1057பார்த்தது
சாய் காய் டூ ட்ரெடிஷனல் கராத்தே மற்றும் ஸ்போர்ட்ஸ் யூனியன் நடத்தும் 2023 ஆம் ஆண்டிற்கான கராத்தே பிளாக் பேல்ட் வழங்கும் நிகழ்ச்சி கோவை பீளமேடு பகுதியில் உள்ள விஜய் எலன்சா ஹோட்டலில் சாய் காய் டூ ட்ரெடிஷனல் கராத்தே அண்ட் ஸ்போர்ட்ஸ் யூனியன் சார்பாக 2023ம் ஆண்டிற்கான கராத்தே பிளாக் பேல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில், தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கராத்தே அசோசியேஷன் ஆஃப் இந்தியா பிரசிடெண்ட் ஹர்ஷத் அலிகான் கலந்து கொண்டு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக சாய் காய் டூ கராத்தே துணை தலைவர் மோகன் கலந்து கொண்டார். தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் நட்சத்திர ஓட்டலில் இரவு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆசிய கராத்தே நடுவர் அறிவழகன் செய்திருந்தார். இதில் சீனியர் மாஸ்டர் ஜெயபிரகாஷ், மற்றும் தலைமை பயிற்சியாளர்கள் மோகன், கார்த்திக், செல்வசங்கர், ரவிசங்கர், முருகானந்தம், N. மோகன், செல்வகுமார், ராஜேஷ், நாசர் தீன், வெள்ளிங்கிரி, சிவகுமார், சீதாலட்சுமி, சுசிலா, தங்கம், சரவணன், மனோஜ், பிரகதீஷ் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி