23 ஆயிரம் கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்

56பார்த்தது
23 ஆயிரம் கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்
ஜெர்மனியில் ரூ.23 ஆயிரம் கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது. ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொலம்பிய அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் 35.5 மெட்ரிக் டன் கொக்கைன் கைப்பற்றப்பட்டதாக டுசெல்டார்ஃப் நகரில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். ஹம்பர்க் துறைமுகத்தில் 25 டன், ரோட்டர்டாம் துறைமுகத்தில் 8 டன், கொலம்பியாவில் 3 டன் கொக்கைன் கைப்பற்றப்பட்டது. இதில் தொடர்புடைய மாஃபியா கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி