BSNL 5ஜி சேவை திட்டம் சோதனை கட்டத்தில் உள்ள நிலையில், வரும் அக்டோபர் இறுதிக்குள் 80,000 டவர்களும், 2025 மார்ச் மாதத்துக்குள் சுமார் 21,000 டவர்களும் நிறுவப்படும் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். இந்நிலையில் முக்கிய நகரங்களான சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவிற்கு விரைவில் சோதனை அடிப்படையில் 5ஜி சேவை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 4ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என BSNL நிர்வாகம் கூறியுள்ளது.