திருப்பதி, திருமலையில் தெலங்கானா மாநிலம் கட்வால் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது 3 வயது மகன் அபினவ் உடன் திருமலைக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர். பக்தர்கள் வளாகத்தில் காத்திருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிறுவனை கடத்திச் சென்றுள்ளனர். மகனை காணாததால் தேடி அலைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். சிசிடிவி கேமராக்களின் அடிப்படையில் சிறுவனை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்து சிறுவனை பத்திரமாக மீட்டனர்.