குழந்தை கடத்தல்: மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மீது தாக்குதல்

59பார்த்தது
குழந்தை கடத்தல்: மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மீது தாக்குதல்
குழந்தை கடத்த வந்ததாக நினைத்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பில் நேற்று (மே 14) இரவு குழந்தைகளுடன் விளையாட வந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை குழந்தைகளை கடத்த வந்ததாக நினைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயம் அடைந்த இளைஞர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டேரி போலீசார் நடத்திய விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம் கடுக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் அஜித் (19) என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி