பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவருக்கு முதலமைச்சர் இரங்கல்

62பார்த்தது
பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவருக்கு முதலமைச்சர் இரங்கல்
கெங்கவல்லி அருகே கடம்பூர் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி