தமிழ்ப் புத்தாண்டு - செல்வப்பெருந்தகை வாழ்த்து

82பார்த்தது
தமிழ்ப் புத்தாண்டு - செல்வப்பெருந்தகை வாழ்த்து
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். நமது கொண்டாட்டத்தில் கலாச்சாரம், பண்பாடு மற்றும் மொழியியல் ஆகியவை தொடர்ந்து போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதை தலைமுறை தலைமுறையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சமீப காலமாக தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் கலாச்சார, பண்பாட்டின் மீதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒன்றிய பா. ஜ. க. அரசு கடுமையான படையெடுப்பை நடத்தி வருகிறது. இதனைத் தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் மூலமாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் சீர்குலைவு செயல்கள் நடைபெற்று வருகின்றன.

இதை ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிலுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் எதிர்த்து போராடி வருகின்றன. இத்தகைய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளில் இருந்து தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.

இந்த குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் அமைந்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி