தோல்வி பயத்தால் மோடிக்கு எதிராக பொய் பிரச்சாரம்: பாஜக

83பார்த்தது
தோல்வி பயத்தால் மோடிக்கு எதிராக பொய் பிரச்சாரம்: பாஜக
தோல்வி பயத்தால் மோடிக்கு எதிராக மு. க. ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார் என தமிழக பாஜக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ. என். எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராவது உறுதியானது என்பதாலும், மோடிக்கு தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆதரவாலும் தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் ஏதேதோ பேசுகிறார்.

தலைநகர் சென்னையில் திமுகதான் அதிக முறை வென்றுள்ளது. ஆனால், சென்னையில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் எவ்வளவு என்பதை ஸ்டாலின் பட்டியலிட முடியுமா?

பிரதமர் மோடியின் தொடர் வருகையால் இந்த மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜக கூட்டணி பெறப்போகும் வெற்றி, திராவிட மாடலை தகர்த்து வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழகத்தை வளர்ச்சி என்ற பாதையில் கொண்டு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி