சென்னை: அரசு ஊழியர்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள் - ராமதாஸ்

57பார்த்தது
சென்னை: அரசு ஊழியர்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள் - ராமதாஸ்
2026 தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திமுக அரசுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலின் போது அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் நலன் சார்ந்து திமுக அளித்த வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானவை. 1. தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் (வாக்குறுதி எண்: 153). 2. 70 வயதைக் கடந்த ஓய்வூதியர்களுக்கு 10% ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் (வாக்குறுதி எண்: 308). 3. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் (வாக்குறுதி எண்: 309).

4. சமவேலைக்கு சம ஊதியம் என்ற தத்துவத்தின்படி, ஆசிரியர்களுக்கு இடையிலான ஊதிய முரண்பாடுகள் களையப்படும் (வாக்குறுதி எண்: 311). 5. அங்கன்வாடி பணியாளர்களும், சத்துணவு பணியாளர்களும் அரசு ஊழியர்களாக்கப்படுவார்கள் ( வாக்குறுதி எண்: 313). குறிப்பாக இந்த 5 வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட அரசு நிறைவேற்றவில்லை.

2026 தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சரியான பாடம் புகட்டுவார்கள். 2026ம் ஆண்டில் அமையவிருக்கும் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி