புள்ளியியல் துறை நிலைக் குழு கலைப்பு: காங். கடும் விமர்சனம்

84பார்த்தது
புள்ளியியல் துறை நிலைக் குழு கலைப்பு: காங். கடும் விமர்சனம்
மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு உடனடியாக இணைத்து நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசின் புள்ளியியல் துறையின் நிலைக் குழுவைக் கலைத்தது குறித்து அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த டாக்டர் பிரனாப் சென் இது குறித்தும் கூறும்போது, இக்குழுவை கலைத்ததற்கான எந்தக் காரணமும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு நாங்கள் எடுத்த நடவடிக்கைகளுக்கு எந்த ஒத்துழைப்பையும் வழங்காத ஒன்றிய அரசு தற்போது நிலைக் குழுவையே கலைத்திருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

ராகுல் காந்தியின் கோரிக்கையின்படி சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்பதற்கு நாட்டில் மிகப்பெரிய ஆதரவு பெருகி வருகிற நிலையில் அதை தவிர்ப்பதற்காகவே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் மோடி அரசு தடுத்து வருகிறது.

தலைவர் ராகுல் காந்தியின் சமூக நீதிக்கான போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் செயல்பட்டு வருகிற மோடி அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக இணைத்து நடத்த வேண்டுமென என அவர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :