பழனிசாமி அதிமுகவின் நிர்வாக இயக்குநரா? - ஹெச். ராஜா

76பார்த்தது
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழக பாஜக வழிகாட்டுதல் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஹெச். ராஜா ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், ஆளுநர் ஆர். என். ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரிடம் பேசியது தொடர்பாக வெளியில் தெரிவிப்பதற்கு ஒன்றும் இல்லை. கடந்த 5 ஆண்டுக்கு முன்பு, அப்போதையை எதிர்கட்சித் தலைவராக இருந்த மு. க. ஸ்டாலினால் ஊழல்வாதி என சான்றிதழ் கொடுக்கப்பட்டவர்தான் செந்தில் பாலாஜி. தற்போது, அவரை ஊழல் தடுப்பு வழக்கில் விசாரிக்க தமிழக அரசுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியதை வரவேற்கிறோம்.

பாஜக கட்சி கார்ப்பரேட் நிறுவனம்போல செயல்படுவதாக அதிமுகவினர் கூறுகின்றனர். அப்படி என்றால் பழனிசாமி அதிமுகவின் நிர்வாக இயக்குநரா என நான் கேட்கிறேன். வார்த்தைகள் இருக்கிறது என்பதற்காக அதிமுகவினர் பேசிக்கொண்டு இருக்கக் கூடாது என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி