முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆராய 8 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு தற்போது அரசியல் கட்சிகளிடம் கருத்துக்களைக் கேட்டு வருகிறது. இந்நிலையில், இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கடிதத்தை விசிக சார்பாக திருமாவளவன், டெல்லி சென்று ராம்நாத் கோவிந்திடம் நேரடியாக அளித்தார்.