சென்னை பூக்கடை பகுதியில் உள்ள லாட்ஜில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக, பூக்கடை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
போலீசார், மெமோரியல் ஹால் சாலையில் உள்ள குறிப்பிட்ட லாட்ஜில் கண்காணித்தபோது, அங்குள்ள ஒரு அறையில் தங்கியிருந்த இருவர், சட்டவிரோத விற்பனைக்காக உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், மும்பை, மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முருகையா, 40, கார்த்திக் பீம்ராவ் கோலி, 27, என்பதும், இருவரும் மும்பையில் இருந்து டைடோல் உடல்வலி நிவாரண மாத்திரைகளை கடத்தி வந்து, பூக்கடை பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 400 டைடோல் உடல்வலி நிவாரண மாத்திரைகள், 3. 80 லட்சம் ரூபாய் மற்றும் நான்கு மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.