சென்னை: கஞ்சா சாக்லேட் விற்ற வடமாநில வாலிபர் கைது

50பார்த்தது
சென்னை: கஞ்சா சாக்லேட் விற்ற வடமாநில வாலிபர் கைது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இரவு நேரங்களில் கஞ்சா சாக்லேட் மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பெரியமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நேற்று முன்தினம் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தை ரகசியமாக கண்காணித்தனர்.

 அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் வாலிபர்கள் அடிக்கடி வந்து சந்தித்து சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த வாலிபரை பிடித்து சோதனை செய்த போது, 30 கஞ்சா சாக்லெட் மற்றும் 150 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக் பிரசாத் மாலிக் (20) என்றும், இவர் ஒடிசா மாநிலத்தில் இருந்து உயர் ரக கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் ரயில் மூலம் கடத்தி வந்து, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் கார்த்திக் பிரசாத் மாலிக்கை கைது செய்தனர். அவனிடம் இருந்து 30 கஞ்சா சாக்லேட் மற்றும் 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி