முதல்வர் ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு...

5165பார்த்தது
முதல்வர் ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு...
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாகனங்கள் வாங்கபட்டுள்ளது. முதலமைச்சர்களுக்கு கோர்சேல் என்ற தனிப்பிரிவு போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்த தனிக்குழுவில் ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர் என மொத்தம் 6 பேர் இடம்பெற்றிருப்பார்கள். முதலமைச்சர்களின் கான்வாயில் இவர்கள் தான் பாதுகாப்புக்கு செல்வார்கள். முதல்வரின் இல்லம், அலுவலகம், மேலும் அவர் வெளியே செல்லும் அனைத்து இடங்களுக்கும் இவர்கள் பாதுகாப்புக்கு செல்வார்கள். முதல்வர் செல்லும் போதும், அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு குறித்தும் இவர்கள் தான் கண்காணிப்பார்கள். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் பாதுகாப்புக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலினின் வாகனங்கள் ஏற்கனவே வெள்ளை நிறத்தில் இருந்த நிலையில் தற்போது 6 கருப்பு நிற கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த புதிய வாகனங்களில் முதலமைச்சர் ஸ்டாலினின் பாதுகாப்புக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கார்களில் 3 கண்காணிப்பு கேமரக்கள் உள்ளன. அனைத்து நிகழ்வுகளையும் படமாக்கும் வகையில் இந்த கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வீரர்கள் வெளியில் இருந்தவாறே கார்களில் நிற்கும் வகையில் இந்த காரக்ள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி