மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து நம்முடைய பங்காக 39 எம்பிக்களை மக்களவைக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், 2026ல் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால், 2024 தேர்தலில் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.