வெள்ளத்தடுப்பு பணி மாதிரி பயிற்சிகள் நடத்த வேண்டும்: அமைச்சர்

52பார்த்தது
சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக மாதிரி பயிற்சிகளை நடத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை மாநகரில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அமைச்சர் உதயநிதி தலைமை வகித்தார். இதில், அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு, எ. வ. வேலு, தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியன், பி. கே. சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி