உடல் உறுப்பு தானம்: ஆந்திர வாலிபர் உடலுக்கு அரசு மரியாதை

55பார்த்தது
உடல் உறுப்பு தானம்: ஆந்திர வாலிபர் உடலுக்கு அரசு மரியாதை
உடல் உறுப்பு தானம் செய்த ஆந்திர பிரதேச வாலிபருக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆந்திர பிரதேசம் பெட்ஜங்களபள்ளி, பிரகாசம், வல்லபெல்லி, பள்ளிகுறவா கொம்மினெனிவாரி பெல்லம் என்ற முகவரியைச் சேர்ந்த சி. சந்திரசேகர் (வயது 35) என்பவர் கடந்த 6ம் தேதி சாலை விபத்தில் காயமடைந்ததில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 6ம் தேதி இரவு இறந்து போனார். மேலும், முன்னதாக மூளைச்சாவு அடைந்த சந்திரசேகரின் குடும்பத்தினர், அன்னாரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக விருப்பம் தெரிவித்தனர். குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் சந்திரசேகரின் இதயம். கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகிய உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையின்படி உடல் உறுப்பு தானம் செய்த ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகரின் உடலுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இந்நிகழ்வில் வடசென்னை வருவாய் கோட்ட அலுவலர் ஆர். எம். இப்ராஹிம், புரசைவாக்கம், வட்டாட்சியர் (பொ), மஞ்சுநாத் மற்றும் காவல் துறையினர் உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி