அண்ணா பிறந்தநாளை கொண்டாட திமுகவுக்கு தகுதி இல்லை என்று அதிமுக விமர்சித்துள்ளது. அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர், கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் ஒரு திட்டத்திற்கு கூட அண்ணா பெயரை திமுக அரசு வைக்கவில்லை, கருணாநிதி புகழை பாடி கொண்டுள்ளது என்று சாடினார். அண்ணா கொள்கை மறைக்கப்பட்டு RSS கிளையாக திமுக மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக வெளிநாட்டு பயணத்தில் போதிய முதலீடுகளை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவரவில்லை என குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.