நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதை அடுத்து சென்னை அண்ணாநகரில் உள்ள திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் திமுக முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றதுடன் உடல்நலம் விசாரித்தார்.
இந்நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி ஆர் எஸ் பாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.