சென்னை மெட்ரோ ரயிலில் 20% கட்டண தள்ளுபடியுடன் பயணிகள் பயணிக்க அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிங்கார சென்னை' அட்டையை இனி செல்போன் எண்ணை வழங்கி OTP மூலம் உறுதி செய்து பெறலாம் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்பு பின்பற்றப்பட்ட KYC சரிபார்ப்பு இல்லாமல் இன்று முதல் இந்த சலுகை அட்டையை எளிதாக ரயில் நிலையத்திலேயே பெற முடியும். இதுவரை மொத்தம் 3.89 லட்ச ‘சிங்கார சென்னை' அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.