நடைபயிற்சி நாள்பட்ட முதுகுவலியை போக்குமா?

81பார்த்தது
நடைபயிற்சி நாள்பட்ட முதுகுவலியை போக்குமா?
நடைபயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சி முறைகள் நாள்பட்ட முதுகுவலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. 701 பெரியவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நடைபயிற்சி உள்ளிட்ட வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டவர்களுக்கு முதுகுவலியில் இருந்து நிவாரணம் கிடைத்ததாக ஆய்வுக்குழு குறிப்பிட்டுள்ளது.

முதல் குழுவில் உள்ளவர்களை தவறாமல் நடக்கவும், இரண்டாவது குழுவில் பிசியோதெரபி அமர்வுகள் மற்றும் மூன்றாவது குழுவில் குறிப்பிட்ட பயிற்சிகள் ஏதுமின்றி நடக்கவும் செய்து ஆய்வை நடத்தியதாக ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் மார்கன்காக் கூறினார். தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் முதுகுவலியில் இருந்து பெரும் நிவாரணம் பெறுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி