யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிப்பு

63பார்த்தது
யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிப்பு
ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற எழுத்துத் தேர்வு இம்முறை, கணினி வழியில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. சிஐஎஸ்ஆர் - யுஜிசி நெட் தேர்வும் ஜுலை 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும். என்சிஈடி தேர்வு, ஜுலை 10ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

முறைகேடு புகார்களை தொடர்ந்து தேசிய தேர்வு முகமை கடும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு தொடங்கி நெட் தேர்வும் இதில் விதிவிலக்கில்லாமல் சிக்கியுள்ளதால் அண்மையில் தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி