அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட கால அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கியின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எஸ்பிஐ வங்கி நாளை மாலைக்குள் தேர்தல் பத்திர விவகாரங்களை வெளியே விட வேண்டும் எனவும், மார்ச் 15ஆம் தேதிக்குள் அதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடும் உத்தரவை செயல்படுத்த தவறினால் எஸ்.பி.ஐ அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.