ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து: அதிர்ச்சி வீடியோ

61பார்த்தது
கென்யாவில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வடக்கு வாஜிரிலிருந்து தலைநகர் நைரோபிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. ஆற்றில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டதால், பேருந்து சிறிது தூரத்திற்கு அடித்துச் செல்லப்பட்டது. இருப்பினும் 51 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பத்திரமாக தப்பினர். அவர்கள் அனைவரையும் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு காப்பாற்றினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி