பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

59பார்த்தது
பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை குரோம்பேட்டையில் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில், இரவு இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டதை கண்ட கல்லூரி நிர்வாகம் உடனடியாக சிட்லப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் வந்த போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது இ.மெயிலில் குறிப்பிட்டது போல கல்லூரி வளாகத்தில் எந்தப் பகுதியிலும் வெடிகுண்டு சிக்கவில்லை. இதனால் அந்த இ.மெயில் செய்தி புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி