பாம்பின் பெயரைக் கேட்டாலே முதலில் வருவது பயம்தான். ஆனால் இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் உள்ள பாம்பு செய்யும் செயல் நம்மை மெய்மறக்க வைக்கிறது. @AMAZlNGNATURE என்ற X கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் நீல நிறத்தில் இருக்கும் ப்ளூ இன்சுலாரிஸ் பிட் வைப்பர் என்ற அழகிய பாம்பு ஒன்று மெதுவாக நகர்ந்து வந்து இலையில் படிந்துள்ள நீரை குடிக்கிறது. இருப்பினும், இந்த பாம்பு எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அந்த அளவு ஆபத்தானது.