சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் ‘தமிழ்நாடு பொதுமேடை 2024’ என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். அவர் எழுதியுள்ள “நீதித் துறையை நிலைகுலையச் செய்யும் பாஜக அரசு” என்ற கட்டுரை ஒரு இணைய இதழில் வெளிவந்தது. இதனையடுத்து பாஜகவினர் அரிபரந்தாமன் மற்றும் அவரது அமைப்பை அச்சுறுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சமூகச் செயல்பாட்டாளர்கள், அரசியல் களத்தில் கருத்து போராட்டங்கள் நிகழ்வதை தடுத்து கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் முயற்சி என தெரிவித்துள்ளனர்.