பாஜக வெறுப்பு மற்றும் பொய்ப் பிரச்சாரம்: மனோதங்கராஜ் குற்றச்சாட்டு

61பார்த்தது
பாஜக வெறுப்பு மற்றும் பொய்ப் பிரச்சாரம்: மனோதங்கராஜ் குற்றச்சாட்டு
பாஜக வெறுப்பு மற்றும் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், வெறுப்பு பேச்சு,பொய்யான தகவல்கள், போலி விளம்பரங்கள் செய்து மக்களை கவர கடந்த மாதம் மட்டும் கூகுள் நிறுவனத்திற்கு ரூ.30 கோடிக்கு விளம்பரம் போலியான மற்றும் மத உணர்வுகளை தூண்டும் பாஜகவின் விளம்பரங்களை தென்னிந்திய மக்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் வட இந்திய மக்களை குறிவைத்து அவர்கள் உணர்வுகளோடு விளையாடும் விதமாக விளம்பரங்களை கட்டமைக்கிறார்கள். இது ஒரு புறமிருக்க மறுபுறம் பாஜக மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளின் சமூக வலைதள செயல்பாடுகள் சமூக வலைதள விதிமுறைகளுக்கும், நெறிகளுக்கும் புறம்பாக உள்ளதாக கூறி 50 % பதிவுகளை சமூக வலைதளங்கள் நீக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி