12ம் வகுப்பு தேர்வில் பிட்.. இன்ஸ்டாவில் ஸ்டோரி

557பார்த்தது
12ம் வகுப்பு தேர்வில் பிட்.. இன்ஸ்டாவில் ஸ்டோரி
வேலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 11 மற்றும் 15 ஆம் தேதிகளில் கணக்குப் பதிவியல், பொருளியல் பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு தான் "பிட்" எடுத்துச் சென்றதாக கூறி, அதனை பள்ளி வளாகத்தில் இருந்தே போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவர் ஒருவர் ஸ்டோரிகளாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்த உண்மைத்தன்மை தெரிந்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி