வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பிரதமர் மோடியை தொடர்புகொண்டு பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரும் பாதுகாக்கப்படுவர் என பிரதமர் மோடியிடம் முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளார். ஜனநாயகம், அமைதி மற்றும் முற்போக்கான வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவை தெரிவித்ததாக பிரதமர் மோடி X தளத்தில் பதிவு செய்துள்ளார்.