தமிழ்நாட்டில் 23 வகையான வெளிநாட்டு நாய் இனங்களுக்கு தடை

17538பார்த்தது
தமிழ்நாட்டில் 23 வகையான வெளிநாட்டு நாய் இனங்களுக்கு தடை
தமிழ்நாட்டில் 23 வகையான வெளிநாட்டு நாய்கள், கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது இடங்களுக்கு நாய்களை அழைத்துச் செல்லும்போது கட்டாயம் சங்கிலி, முகக்கவசம் அணிவிக்க வேண்டும். நல்ல தரமான கழுத்து பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கெடுபிடிகளை நாய் உரிமையாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி