யானைகளை கொடூரமாக தாக்கிய பாகன் (வீடியோ)

62250பார்த்தது
கேரளாவில் உள்ள கோயில்களில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று குருவாயூர் கிருஷ்ணன் கோயில். இந்த கோயிலுக்கு சொந்தமாக 30 யானைகள் உள்ளன. அதில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய யானையும் அடங்கும். இந்நிலையில் ஜெயலலிதா வழங்கிய யானை உள்பட 2 யானைகள் அதன் பாகன்கள் கட்டையால் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் வலி தாங்க முடியாமல் பிளிறிய போதும் தொடர்ந்து தாக்கியுள்ளனர். 4 பாகன்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி