திருச்சியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் குணா. சம்பவத்தன்று கஞ்சா போதையில் வீடு திரும்பிய அவர், மனைவி மற்றும் தாயை ஆபாசமாக பேசிவிட்டு உறங்கச்சென்றுள்ளார். காலையில் மர்மமான முறையில் படுக்கையறையில் சடலமாக கிடந்தார். மனைவி, தாயிடம் தொடர்ந்து சண்டையிட்டு வந்த ஆத்திரத்தில், உறவினர்களான திருநங்கைகள் இருவரிடம் கூறி, 4 பேரும் கூட்டு சேர்ந்து குணாவை கொலை செய்துள்ளனர். காற்று நிரப்பிய வெற்று ஊசியை நரம்பில் செலுத்தியும், கழுத்தை நெரித்தும் கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.