பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு இன்று (நவ., 28) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 5,000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 27 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.