பெரம்பலூர் அருகே பீரோ உற்பத்தி செய்யும் தொழிற்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் போலீசார் விசாரணை.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூர் கிராமத்தில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முகமதுசுல்தான் என்பவர் வெல்டிங் பட்டறை மற்றும் இரும்பிலான பீரோக்கள் பர்னிச்சர் உற்பத்தி செய்து பெயிண்ட் அடிக்கும் தொழில் நடத்தி வருகிறார். இதில் டிசம்பர் 31ம் தேதி மாலை திடீரென கடையின் உட்பகுதி கரும்புகையுடன் மல மலவென தீப்பற்றி எறிய தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றும் முடியாத நிலையில், பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து அது மேலும் பரவாமல் தடுத்தனர்.
இந்த தீ விபத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான பெயிண்ட் மற்றும் பீரோக்கள் செய்வதற்கான மூலப்பொருட்கள் அதற்கான தொழில் கூடம் உள்ளிட்டவை சேதமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் சுமார் சிறிது நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.