அரியலூர்: உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த மான் - வீடியோ

6032பார்த்தது
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் வசிப்பவர் சங்கீதராஜா இவருக்கு சொந்தமான நிலத்தில் நீர் பாசன முறையில் முந்திரி மற்றும் தீவனப்பயிர் விவசாயம் செய்துள்ளார். இன்று காலை 6: 30 மணி அளவில் நிலத்தை சுற்றி பார்க்க சென்றபோது மான் ஒன்று தரையில் கிடந்ததையடுத்து அருகில் சென்று பார்த்தபோது அது ஆண்மான் என்றும் மான் சுமார் 40 கிலோ எடையுடன் இரு பெரிய கொம்புகளுடன், உடலின் கீழ்பகுதியில் சிறிய காயத்துடன் இறந்து விறைத்த நிலையில் கிடந்துள்ளது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது மக்களிடம் தகவல் தெரிவித்தார். இறந்து கிடந்தை மானை பார்த்த பெரியவர்கள் சிலர் மான் கம்பி வேலி தாண்டும் பொழுது கீழ்ப்பகுதியில் காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். இதனை அறிந்த ஊராட்சி மன்றதலைவர் ராஜேந்திரன்
இரும்புலிகுறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தார்.

மேலும் இதுகுறித்து வனத்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்ததின் பேரில் இரும்புலிகுறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மான் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி