அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத் துறை இணை இயக்குனர் மாரிமுத்து திடீர் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் இருப்பில் உள்ள மருந்து, மாத்திரைகள் ஆகியவை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களிடம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கிறார்களா என்பது குறித்து கேட்டு அறிந்தார்.