அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற உலக புகழ் பெற்ற யுனிஸ்கேவால் புராதான சின்னமாக அறிவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் சோழிஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு 40 ஆம் ஆண்டாக அன்னாபிஷேகம் வரும் இன்று நடைபெற்றது. சோழீஸ்வரர் கோவிலில் உள்ள பதி மூன்றரை அடி உயரமும் 60அடி சுற்றளவும் கொண்ட லிங்கத்திற்கு 100 மூட்டை அரிசியால் நீராவி கொதிகலன்களைக் கொண்டு சாதம் சமைத்து லிங்கத்தின் மேல் சாத்தப்பட்டது.
இது காலையில் 9: 00 மணி முதல் சாதம் சமைத்து ஆற வைத்து லிங்கத்தின் மேல் சாத்தப்பட்டது.
அவ்வாறு சாத்தப்படும் சாதம் தரிசிக்கும் போது ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது எனவும், கோடிக்கணக்கான லிங்கத்தை நேரில் தரிசிப்பதாக ஐதீகம்.
மாலை 6 மணி அளவில் முழு நிலவு உதிக்கும் நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து எட்டு மணி அளவில் லிங்கத்தின் மேல் உள்ள சாதங்களை பிரித்து பக்தர்களுக்கு உணவாக வழங்கப்பட்டது.
பக்தர்களுக்கு வழங்கியது போக மீதம் உள்ள சாதத்தை அருகில் உள்ள ஆறு ஏரி குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்பட்டது.
இன்று மாலை முதல் மழை பெய்து வந்த நிலையில் மழையையும் பொருட்படுத்தாமல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் லிங்கத்தினை தரிசித்து சென்றனர்.