சமத்துவ நாள் உறுதிமொழியினை அரசுத்துறை அலுவலர்கள் எற்பு

597பார்த்தது
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் கற்பகம், தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் ஏப்ரல் 12 ஆம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் சமத்துவ நாள் உறுதி மொழி அரசின்சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு அண்ணலின் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறையாக உள்ளதால், ஏப்ரல் 12ஆம் தேதி சமத்துவநாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது,

இந்நிகழ்வில், உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க அதனைத் தொடர்ந்து, அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திகேயன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சரண்யா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்கள் சிவா, பாரதிவளவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி