அரியலூரில் மது விற்ற இருவர் கைது

1090பார்த்தது
அரியலூரில் மது விற்ற இருவர் கைது
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற வெண்மான்கொண்டான் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன், அரியலூர் சாக்கோட்டை தெருவை சேர்ந்த தியாகராஜன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி