புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடு: எஸ். பி. உத்தரவு

4433பார்த்தது
புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடு: எஸ். பி. உத்தரவு
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: - புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்கள், தேவாலயங்கள், முக்கிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியினை தீவிர படுத்தப்பட்டுள்ளது.

லாட்ஜ் மற்றும் திருமண மண்டபத்தில் சோதனை மேற்கொள்ளவும், இளைஞர்கள் அல்லது சிறுவர்கள் சாலையில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வது, வேகமாக பயணிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வாகன சோதனைகள் செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலையின் நடுவே கேக் வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது. சாலைகளில் மது அருந்திவிட்டு பொதுமக்களிடம் தொந்தரவு செய்யக்கூடாது. விடுமுறைக்கு நீண்ட நாட்கள் வெளியூருக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு செல்லுதல் வேண்டும்.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எத்தகைய செயல்களிலும் இளைஞர்கள் ஈடுபட கூடாது. மேலும் புத்தாண்டு தினத்தன்று மாவட்டம் முழுவதும் சுமார் 750 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி