அரியலூரில் பல லட்சம் மோசடி செய்தவர் கைது

5600பார்த்தது
அரியலூரில் பல லட்சம் மோசடி செய்தவர் கைது
அரியலூர் சிங்கார தெருவில் வசிக்கும் மோகன் மகன் சதீஷ்குமார் (36) இவர் ஒரு தனியார் சிட்பண்ட் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அரியலூர் மாவட்டம் மண்டையன்குறிச்சி கிராமம் விஜயகுமார் என்பவரின் மூலமாக கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா கிச்சக்கத்தியூர் சிறுமுகை கிராமத்தில் வசிக்கும் வெங்கடாசலம் மகன் ராஜ்குமார் என்பவர் அறிமுகபடுத்தப்பட்டு, இவரின் மூலமாக எனக்கு இந்திய உணவுக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக் கூறியதன் மூலம், ராஜ்குமார் நடத்தி வந்த ஸ்ரீ விருட்ச பீடம் வங்கிக் கணக்கிற்கு ரூ. 14, 20, 000/- அனுப்பியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்டு, நம்பிக்கை மோசடி செய்து, போலி பணி நியமன ஆணை வழங்கி, ஏமாற்றி பணத்தை திருப்பி தராமல் இருந்து வந்த நிலையில், புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், ராஜ்குமார் அரியலூர் மாவட்டத்தில் இதுபோன்று பலபேரிடம் இந்திய உணவுக் கழகத்தில் AO வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, ரூ. 15 50, 000/- பணத்தைப் பெற்றுக் கொண்டு, போலி பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றியும், பணத்தை திருப்பி கேட்டால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி