அரியலூரில் கோர விபத்து: கூலி தொழிலாளி பலி

58பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே விளந்தை திலகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் அமிர்தலிங்கம் (37) கூலி தொழிலாளியாள இவர் ஆண்டிமடம் செல்வதற்காக காடுவெட்டி-ஆண்டிமடம் செல்லும் அரசு டவுன் பஸ்ஸில் ஏறி பயனித்தபோது, நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு, அதே பஸ்ஸில் ஆண்டிமடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது, அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :