அ. குடிக்காடு கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா

559பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் அ. குடிக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் கோவில். இத்திருக்கோவில் கடந்த ஏழு ஆண்டுக்குப் பின் திருவிழா நடைபெற்றது. கடந்த மே 26ம் தேதி அன்று பூச்சொரிதல் நிகழ்சியுடனும் தொடர்ந்து ஜூன் இரண்டாம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய திருவிழாவில், ஒவ்வொரு நாளும் ஶ்ரீமாரியம்மனுக்குசிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஜூன் 10ஆம் தேதி நடைபெற்றது. ஸ்ரீ மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஶ்ரீ அம்மன் மேள தாளங்கள் முழங்க திருத்தேரில் எழுந்தருளி பக்தர்கள் காட்சியளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். முக்கிய வீதி வழியாக சென்ற தேர் மாலை தேர் கோயிலின் நிலைக்கு வந்து நிறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி