அரியலூர்: கர்ப்பிணி பெண் மர்மச்சாவு - போலீசார் விசாரணை

2629பார்த்தது
அரியலூர்: கர்ப்பிணி பெண் மர்மச்சாவு - போலீசார் விசாரணை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழமாதேவி கிராமம் மேலத் தெருவை சேர்ந்த தங்கராசு மகன் சக்திவேல். டிரைவரான இவருக்கும் ஆண்டிமடம் அருகே உள்ள திராவிடநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த  பவானி (25) (நர்சிங்  படித்ததவர்) என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு  காதலித்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்து வந்ததாகவும் தற்பொழுது பவானி ஆறு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

பவானி 5 மாத கர்ப்பிணியாக இருக்கும்போதே அவரை தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். நேற்று முன்தினம் இவர்களுக்கு திருமண நாள் என்பதால் மனைவி பவானியை சக்திவேல் அவரது தாயார் வீட்டில் இருந்து அழைத்து வந்து இருவரும் திருமண நாளை கொண்டாடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பவானி வீட்டில் யாரும் இல்லாதபோது தனது சுடிதார் துப்பட்டாவால்  தூக்கில் தொங்கியவாறு இறந்தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பவானியின் தந்தை ரங்கநாதன் தா. பழூர் காவல் நிலையத்தில் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தா. பழூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பவானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து கொலையா? தற்கொலையா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி