அரியலூரில் பழமையான சிலை கண்டெடுப்பு:

68பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில், பழைய கோவிலை அகற்றிவிட்டு, ரூ. 12 கோடி மதிப்பீட்டில் புதிய கற்கோவில் அமைக்கும் பணிக்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஜேசிபி எந்திரம் கொண்டு கற்களை அகற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென பூமிக்கு அடியில் இருந்து அழகிய முருகன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் இந்த முருகன் கற்சிலையானது 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிலையாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இச்செய்தி அறிந்து பக்தர்கள் சிலையை பார்ப்பதற்காக குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் கோவில் பணிகள் ஆரம்பிக்கும் போதே சிலை கிடைத்து இருப்பதால் இன்னும் பூமிக்கு அடியில் ஐம்பொன் மற்றும் கற்சிலைகள் இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் எனவே தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து கண்டெடுக்கப்பட்ட முருகன் கற்சிலையை பாலாலயம் செய்யப்பட்ட கோவிலுக்குள் வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி