உலகின் பல்வேறு நாடுகளில் இன்று (மே 5) உலக சிரிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மும்பை நகரில் தான் சிரிப்பு தினம் முதன் முதலாக கொண்டாடப்பட்டது. உலக சிரிப்பு தினத்தின் நோக்கம் சமூகத்தின் ஒற்றுமை மற்றும் பிரிவினையை போக்கி அமைதியை பரப்புவதாகும். சிரிப்பு மனிதனின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். உலக சிரிப்பு தினமான இன்று கவலைகளை மறந்து சிரித்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நட்பு பாராட்டுவோம்.